“மற்றமை”- ‘பயன்பாட்டு மன அலசல் ஆய்விதழ்’ : தமிழில் வந்திருக்கும் புதுமையான முதல் முயற்சி.
மேற்குலக நாடுகளிலும்,பல்கலைக் கழகங்களிலும் மட்டுமே காணக்கிடைக்கும் இந்தமாதிரியான ‘psychoanalysis’ இதழ்கள் அரசியல்&பொருளாதாரம் தவிர்த்து, இன்னும் ஆழமாக சமூக-அரசியல் பிரச்சினைகள், பாப்புலர் கல்சர்,கலை இலக்கிய படைப்புகளில் ஒளிந்து கொண்டிருக்கும் தனி&கூட்டு மனவெளிப்பாடுகள் மற்றும் சிக்கல்களை உளவியல் நோக்கில் ஆராய்கிறது, தமிழ்ச் சூழலில் இது அவசியமான முதல் தொடக்கம்:
இந்த முதல் இதழில் ‘நட்டி புரொபசர்’ படத்தைப்பற்றிய உளவியல் அலசல் தமிழ் சினிமாவின் தீவிர ஆய்வாளர்களும் க்ரிட்டிக்குகளும் கவனிக்கவேண்டியது. ஈழப்பிரச்சினையின் பிண்ணனியில் உள்ள உளவியல் கூறுகளை இந்த இதழின் ஒருகட்டுரை விவாதிக்கிறது, அதை தொடர்ந்து கீழே படிக்கலாம்.
சைக்கோ அனாலிசிஸ் வார்த்தைகளுக்கு பழக்கப்படாதவர்களும், ஜாலி-அரசியல் பேசுபவர்களுக்கும் சற்றே கடினமாக இருக்கும். இதழ் கிடைக்குமிடங்கள் அட்டையிலிருக்கிறது.
இதழுக்கான வலைதளம்– http://mattramai.blogspot.in/
பின்னுட்டம் எழுதவிரும்புபவர்கள், இதழுக்கே எழுதலாம் : mattramai@yahoo.com











